ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, அவருக்கு ரம்ஜான் மற்றும் நவ்ரூஸ் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அப்போது,மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பிராந்திய நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பாதிக்கும் வகையில் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
கடல்சார் கப்பல் போக்குவரத்து பாதைகள் தடையின்றியும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு ஈரான் அரசு அளித்து வரும் தொடர் ஆதரவிற்கு பிரதமர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
















