தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை, முதலமைச்சர் ஸ்டாலின், வரும் 2ம் தேதி, திருவாரூரில் தொடங்கவுள்ளார்.
தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின், முதல்கட்ட பிரசாரத்தை திருவாரூரில் வரும் 2-ம் தேதி தொடங்கவுள்ளார்.
வரும் 6ம் தேதி, சென்னை கொளத்துார் தொகுதியில் போட்டியிடுவதற்காக, முதல்வர் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் பின் ஏப்ரல் 21 வரை தொடர்ச்சியாக தமிழகம் முழுதும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தேர்தல் பிரசாரத்துக்கான, இறுதி நாளான ஏப். 21ம் தேதி காலை ஸ்ரீபெரும்புதுாரிலும், மாலையில் கொளத்துார் தொகுதியிலும் பயணம் மேற்கொண்டு, பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
















