மக்கள் நலனுக்காக பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும் - பிரகாஷ் எம்.ஸ்வாமி
Oct 5, 2026, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் நலனுக்காக பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும் – பிரகாஷ் எம்.ஸ்வாமி

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 6, 2026, 10:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சாதி, மதம், அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் நலனுக்காக பத்திரிகையாளர்கள் செயல்பட வேண்டும் என கலைமாமணி பிரகாஷ் எம்.ஸ்வாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள குமாரராஜா முத்தையா அரங்கத்தில் கலைமாமணி பிரகாஷ் எம்.ஸ்வாமியின் 50 ஆண்டுகால பத்திரிகை, சமூகப் பணிகளைப் பாராட்டும் 3வது மேடைத் திருவிழா மற்றும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில், முன்னாள் அமைச்சர் பத்மஸ்ரீ டாக்டர் எச்.வி. ஹண்டே, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் பி. வெங்கடரமணன், லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கலைமாமணி பிரகாஷ் எம்.ஸ்வாமி, பத்திரிகைத் துறையில் தன்னை வழிநடத்திய குருமார்களையும், நண்பர்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

சாதி, மதம், அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் நலனையே முதன்மையானது என பத்திரிகையாளர்கள் கருத வேண்டும் என வலியுறுத்தினார். மக்களுக்கு என்ன தேவை என்பதை வழங்க வேண்டுமே தவிர, நமக்கு வேண்டிய கருத்துகளை மக்கள் மீது திணிக்கக் கூடாது என அறிவுறுத்தினார். மேலும், உண்மை உறுதிப்படுத்தப்படாத செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், எந்த தகவலாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட துறைகளிடம் உறுதி செய்த பிறகே வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் வெங்கடரமணன், கலைமாமணி பிரகாஷ் எம். ஸ்வாமியின் ஐம்பது ஆண்டுகால பத்திரிகைப் பயணத்தை வெகுவாகப் பாராட்டினார். “விழுந்த மனிதர்கள்” நூல் தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழலுக்கு மிகவும் பொருத்தமான படைப்பாக அமைந்துள்ளதாக கூறிய அமைச்சர், நேர்மை மற்றும் உண்மை, ஒழுக்கத்தை இழந்தவர்கள் இறுதியில் வீழ்ச்சியைச் சந்திப்பார்கள் என்பதே நூலின் மையக் கருத்தாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை உருவாக்கும் காலம் வரவுள்ளதாகவும், பழைய அரசியல் நடைமுறைகளை உடைத்து புதிய அணுகுமுறைகளை கொண்டுவர வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அமைச்சர் வெங்கட்ரமணன் குறிப்பிட்டார்.

Tags: P. VenkataramananSpeaker J.C.D. PrabhakarPrakash M. SwamyMedai Thiruvizha'Dr. H.V. Hande
Share
Tweet
SendShare
Previous Post

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் – நார்வே காலிறுதிக்கு முன்னேற்றம்

Next Post

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் : 7-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!

Related News

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற வெளிமாநிலத்தவருக்கு தாய் மாமன் மோதிரம் கிடைக்குமா? – பொது சுகாதாரத்துறை விளக்கம்!

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

FQL செயலி மூலம் பல கோடி மோசடி – மதுரை தம்பதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies