சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரத்தை நவீனமயமாக்க 2,190 கோடி கடனுதவி : ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!
Oct 5, 2026, 06:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரத்தை நவீனமயமாக்க 2,190 கோடி கடனுதவி : ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 5, 2026, 01:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மாநகரில் குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரத்தை நவீனமயமாக்க 2 ஆயிரத்து 190 கோடி ரூபாய் கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள தகவலில், சென்னையில் வசிக்கும் 4.5 மில்லியன் மக்களின் குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பை நவீனமயமாக்க 2 ஆயிரத்து 190 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் அடல் புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற மாற்றம் 2.0 திட்டத்துடன் இணைந்து திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாகவும், நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் கட்டமைப்பை, நகரத்தின் மக்கள் தொகை மற்றும் நகர்ப்புற வளர்ச்சியுடன் சமமாக விரிவடைய செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நகரின் மீள்திறன், பொது சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நீண்டகால மேலாண்மையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

170 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் குழாய்களை கட்டமைக்கப்படவுள்ளதாகவும், ஏழு நீர் பம்பிங் நிலையங்கள் மற்றும் 38 கழிவுநீர் பம்பிங் நிலையங்கள் மேம்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சென்னையின் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் கட்டமைப்பில் புதிய குழாய்கள், மேம்படுத்தப்பட்ட பம்பிங் நிலையங்கள் மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டு அமைப்புகளை விரிவாக்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Asian Development BankAsian Development Bank approved loanmodernize drinking water supplysanitation systems in Chennai.
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர் – இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Next Post

திருவள்ளூர் அருகே 2-வது நாளாக தொடரும் அமோனியா வாயு அகற்றும் பணி!

Related News

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற வெளிமாநிலத்தவருக்கு தாய் மாமன் மோதிரம் கிடைக்குமா? – பொது சுகாதாரத்துறை விளக்கம்!

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

FQL செயலி மூலம் பல கோடி மோசடி – மதுரை தம்பதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies