மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!
Oct 4, 2026, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 19, 2026, 07:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் போலீசார் தாக்கியதில் பூசாரி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில், மருத்துவமனைக்கு வந்து காவல் ஆய்வாளர் பேரம் பேசியதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்….

மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த பூசாரி பரமசிவம் என்பவருக்கும் அண்டை வீட்டாருக்கும் இடையே கடந்த ஜூலை 18-ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பான விசாரணையின் போது பரமசிவத்தை சிந்தாமணி காவல்நிலையத்தில் ஆய்வாளர் பாஸ்கரன், எஸ்.ஐ ஜெயக்குமார், காவலர்கள் ஆனந்த், அப்துல் முகமது உள்ளிட்டோர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீடு திரும்பிய அவர், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் மரணத்திற்கு முன்பு பூசாரி பரமசிவம் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், எதிர்தரப்பிடம் பணம் வாங்கிக் கொண்டு காவல்நிலையத்தில் தன்னை தாக்கியதாகவும் தனக்கு ஏதாவது நேர்ந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த காவல்துறை, பூசாரி பரமசிவத்தை போலீசார் தாக்கவில்லை எனவும் வீட்டில் தற்செயலாக கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது.

இதையடுத்து அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிபதி நேரில் சென்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்…

இதுதொடர்பாக பேட்டியளித்த பரமசிவத்தின் மனைவி அய்யம்மாள். காவல்துறையினர் தனது கணவரை அடித்து கொன்றுவிட்டதாகவும், மருத்துவமனைக்கு வந்து தன்னிடம் பேரம் பேசியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பேட்டியளித்த பூசாரியின் மகன் பிரபு, தனது தந்தையை போலீசார் தாக்கியதை தான் பார்த்ததாகவும் தந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.செல்வக்குமார், விசாரணை என்ற பெயரில் ஏழை மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதை போலீசார் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்….

Tags: Paramasivammadurai priest Paramasivammadurai priest Paramasivam deathChinthamani police station
Share
Tweet
SendShare
Previous Post

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

Next Post

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

Related News

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் – சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – சென்னையில் இந்து முன்னணி ஆர்பாட்டம்!

கொடைக்கானல் நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் : 3- வது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல்!

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இல்லத்தரசிகள் கோரிக்கை!

தாராபுரம் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – உதயநிதி மீது வழக்குப்பதிவு!

முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? – அவர் ஆட்சி மேல் அவருக்கே நம்பிக்கை இல்லை – மு.க.ஸ்டாலின்

Load More

அண்மைச் செய்திகள்

ஹாக்கியில் தங்கம் வென்ற மகளிர் அணிக்கு தலா 11 லட்சம் – ஒடிசா அரசு அறிவிப்பு!

ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

தாராபுரத்தில் ரூ. 70 லட்சம் பறிமுதல் – காவல் நிலையம் முற்றுகை!

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – நயினார் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு – தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ!

F-16 போர் விமானங்களை பாரமரிக்க முடியாமல் தரையிறக்கிய உக்ரைன் – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கு முதல்வர் வாழ்த்து!

தவெக வேட்பாளரை உருவகேலி செய்த திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் நிர்மல்குமார்

முதலமைச்சர் விஜய்க்கு தோல்வி பயம் வந்துவிட்டது – நயினார் நாகேந்திரன்

பாபநாசம் தாமிரபரணி ஆறு மற்றும் மண்டபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேரில் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies