மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
Oct 4, 2026, 09:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 19, 2026, 10:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மருத்துவத்துறை சார்பில் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், வடசென்னை மக்களின் மருத்துவ வசதிக்காக 300 கோடி ரூபாய் மதிப்பில் பெரம்பூரில் உலகத்தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவித்தார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும்,

திருநங்கைகளுக்கான மருத்துவச் சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, நெல்லை, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய 7 மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 351 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும் என்றும்,

தரமான மருத்துவ சேவைக்குத் தேவையான செவிலியர், மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களை உருவாக்கும் வகையில் 6 ஆயிரத்து 98 கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் புற்றுநோயைத் தடுக்க 673 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பில் முதலமைச்சரின் புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கம் மேம்படுத்தப்படும் எனவும் கூறினார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 471 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும் என்றும்,

முதற்கட்டமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 84 கோடி ரூபாய் மதிப்பில் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 8 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பெண்களுக்கு HPV DNA பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும்,

மேலும், 2 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் மருத்துவர்களுக்கு பயிற்சியும், நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவும் அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.

 

Tags: tamil nadu cm vijay meetingvijay as cm of tamil naduHealth Insurance Scheme coverage increasedtamil nadu cm vijaytamil nadu cm vijay newsvijay tamil nadu cm livevijay tamil nadu cm 2026
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

Next Post

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

Related News

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவு; நாளை மறுதினம் வாக்குப்பதிவு

கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ABVP கோரிக்கை

90 % பணவீக்கம் : சரிந்த ஈரான் பொருளாதாரம் – அடுத்தது என்ன? சிறப்பு தொகுப்பு!

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் – சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – சென்னையில் இந்து முன்னணி ஆர்பாட்டம்!

கொடைக்கானல் நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் : 3- வது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இல்லத்தரசிகள் கோரிக்கை!

தாராபுரம் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – உதயநிதி மீது வழக்குப்பதிவு!

முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? – அவர் ஆட்சி மேல் அவருக்கே நம்பிக்கை இல்லை – மு.க.ஸ்டாலின்

ஹாக்கியில் தங்கம் வென்ற மகளிர் அணிக்கு தலா 11 லட்சம் – ஒடிசா அரசு அறிவிப்பு!

ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

தாராபுரத்தில் ரூ. 70 லட்சம் பறிமுதல் – காவல் நிலையம் முற்றுகை!

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – நயினார் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு – தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ!

F-16 போர் விமானங்களை பாரமரிக்க முடியாமல் தரையிறக்கிய உக்ரைன் – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கு முதல்வர் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies