தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால், ப.சிதம்பரம் தலைமையில் புதிய கட்சி உருவாக வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்குமாறு திமுகவுக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுப்பதாகவும் அதற்கு திமுக தலைமை மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. .
இதனிடையே விஜயின் தவெக கூட்டணியில் இணைய காங்கிரஸ்-க்கு தொடர் அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு தமிழக காங்கிரசில் ஒரு தரப்பு ஆதரித்தாலும், ப.சிதம்பரம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒருவேளை தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணி வைத்தால், ப.சிதம்பரம் தலைமையில் மீண்டும் “காங்கிரஸ் ஜனநாயக பேரவை” உருவாகும் என பேசப்படுகிறது.
==
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால் புதிய கட்சி
















