ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் 2023  அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை  இந்தியாவில் நடைபெற உள்ளது.  சென்னையில் ஐந்து போட்டிகள் நடைபெற உள்ளன
Oct 10, 2025, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் 2023  அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை  இந்தியாவில் நடைபெற உள்ளது.  சென்னையில் ஐந்து போட்டிகள் நடைபெற உள்ளன

Web Desk by Web Desk
Jul 13, 2023, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நடைபெறும் ஆடவர் கிரிக்கெட் 2023 உலகக் கோப்பை தொடருக்கான முழு அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.  முதல் மற்றும் இறுதிபோட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. சென்னையில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெறயுள்ளது.

உலகக் கோப்பை 2023 ஒரு நாள் தொடர் இந்த முறை இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை  இந்தியாவில் நடைபெற உள்ளது.

இங்கு உள்ள பத்து மைதானங்களில் 45லீக் போட்டிகள் நடைபெறுகின்றன, இதில் சென்னையில் ஐந்து போட்டிகள் நடைபெற உள்ளன.

இதற்கு முன்னதாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என கூட்டாக நடத்தி வந்த உலகக் கோப்பை ஒரு நாள் தொடர்,  முதல் முறையாக இந்தியாவினால் மட்டுமே நடத்தவுள்ளது.

இதையடுத்து உலகக் கோப்பை தொடர் அக்டோபர்- நவம்பர்  மாங்களில் 46 நாள்கள் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி 19 நவம்பர் 2023 அன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தா இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் அரையிறுதி போட்டி நவம்பர் 15ஆம் தேதி மும்பையிலும், இரண்டாவது அரையிறுதி போட்டி நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.

இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலுள்ள 10 மைதானங்களில் நடைபெறுகிறது. அதன்படி அகமதாபாத், சென்னை, பெங்களூரு, தரம்சாலா, டெல்லி, ஹைதராபாத், லக்னோ, கொல்கத்தா, மும்பை, புணே ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

முதல் போட்டி இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இது கடந்த 2019 உலகக் கோப்பை தொடர் இறுதிப்போட்டியின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை தொடரில் ரவுண் ராபின் முறையில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் மோத வேண்டும். இதில் டாப் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி அக்டோப்ர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகின்றன.

இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்தியா விளையாடும் ஒரேயொரு போட்டி மட்டுமே நடைபெறுகிறது.

அதேபோல் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன.

அரையிறுதி போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் விதமாக அமைந்தால் அந்த போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. தற்போது வரை உலகக் கோப்பை 2023 தொடரில் விளையாட இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கேதசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு பயிற்சி போட்டிகள் குவாஹட்டி, திருவனந்தபுரம் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி 9 மற்றும் 10வது அணியாக உலகக் கோப்பை 2023 தொடரில் பங்கேற்கும்.

 

இதுவரை உலக கோப்பையை வென்ற அணிகள்

ஆஸ்திரேலியா 5 முறை கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. 1996 இல் ஒரு முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.  மேற்கிந்தியத் தீவுகள் இரண்டு முறை ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்டை வென்றுள்ளன, ஒரு முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. இந்தியா இரண்டு முறை கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது, முதலில் 1983 இல் மற்றும் பின்னர் 2011 இல். இந்தியாவும் 2003 இல் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா ஒரு தடவை உலகக் கோப்பையை வென்றுள்ளன.

Tags: CricketICC World CupChennaiTamil NaduIndia
ShareTweetSendShare
Previous Post

15 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஆசிய  ஹாக்கி போட்டி- ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடக்கம்

Next Post

விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் ‘குஷி’- இரண்டாவது சிங்கள் ‘ஆராத்யா’, ஒரு மெலோடியான காதல் பாலட், இப்போது வெளியாகி இருக்கிறது.

Related News

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

11 ஆண்டுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ஸ்டார்க்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

Load More

அண்மைச் செய்திகள்

சைவ பாடிபில்டர் வரிந்தர் குமான் மாரடைப்பால் மரணம்!

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 4000 கனஅடி நீர் திறப்பு – ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நெல்லையில் : தனியார் கல்லூரியில் உணவுக் கூடத்துக்கான சான்றிதழ் தற்காலிகமாக ரத்து – உணவு பாதுகாப்புத்துறை

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

கோவில்பட்டி : மின் இணைப்பு வழங்காததால் சாணி பவுடருடன் வந்த பெண்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

2026 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

மதுரை : தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கிட்னி முறைகேடு வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

ஆராய்ச்சி, மேம்பாட்டில் வென்ற அமெரிக்கா – ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies