பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை அந்நாட்டு அதிபர் மெக்கரான் பிரதமர் மோடிக்கு வழங்கினார். பிரான்சில் தேசிய தின அணிவகுப்பிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த ஜூலை 13ம் தேதி அன்று பிரான்ஸ் சென்றார்.
தலைநகர் பாரீஸ் சென்று இறங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
மோடிக்கு பிரான்சின் உயரிய விருது
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்சின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் லெஜியன் ஆஃப் ஹானர் விருதை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கினார். இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
“இந்திய மக்களின் சார்பாக அதிபர் இமானுவேல் மெக்ரானுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்”
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் பதிவில்
மிகுந்த பணிவுடன் விருதை பெற்றுக் கொண்டேன், இது இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு கிடைத்த கௌரவம், அதிபருக்கும், பிரான்ஸ் மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா மீது அவர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த பாசத்தை இது காட்டுகிறது என குறிப்பிட்டு உள்ளார்.
பிரான்சில் UPI சேவையைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் ரொக்கமில்லா உடனடி கட்டணத்தில் இந்திய கண்டுபிடிப்புகளுக்கு, பிரான்ஸ் நாட்டில் ஒரு பெரிய புதிய சந்தையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து உள்ளார்.
பிரான்ஸில் உள்ள இந்தியா வம்சாவளியினர் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் இந்தியா இடையேயான நட்புறவு மேலும் வலுவடைந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சின் பெருமையைக் காக்கும் வகையில் கடமையாற்றிய உயிர் துரந்த இந்திய வீரர்களை நினைவுகூர்ந்தார்.
உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் என்று குறிப்பிட்ட பிரதமர், உலகின் பழமையான மொழி இந்தியாவில் உள்ளது என்பதை விட வேறு என்ன பெருமை வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
திருவள்ளுவருக்கு பிரான்சில் சிலை வைக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், அது இந்தியாவுக்குக் கிடைத்த பெருமை என்று குறிப்பிட்டார்.
உலகம் புதியதை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் வேகமான வளர்ச்சியை மேற்கோள் காட்டி உள்ளார்.
ஐரோப்பிய நாட்டில் முதுகலைப் பட்டம் பெறும் இந்திய மாணவர்களுக்கு ஐந்தாண்டு கால படிப்புக்குப் பிந்தைய பணி விசா கிடைக்கும் என அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 5 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார நிலையை இந்தியா விரைவில் எட்டிப் பிடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும்
புலம்பெயர் உறுப்பினர்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். உலக வல்லுநர்கள் நாட்டின் கவர்ச்சியை முதலீட்டு இடமாக அங்கீகரிப்பதாகவும், வளர்ச்சி அடிப்படையில் நாடு வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
அன்று இரவு, எலிசி அரண்மனையில் பிரதமர் மோடியை கௌரவிக்கும் வகையில் அவருக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரானும், அவருடைய மனைவி பிரிக்கிட்டியும் சிறப்பு விருந்து அளிந்தனர்.
தேசிய தின அணிவகுப்பு
பிரான்ஸ் தேசிய தினத்தையொட்டி 14ம் தேதி ஜூலை அன்று பாரிஸ் நகரில் பிரம்மாண்டமாக அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பிரான்சி அதிபர் மெகிரானும் பாரத பிரதமர் மோடியும் ஒரே மேடையில் அமர்ந்து அணிவகுப்பை பார்வையிட்டனர். பாரம்பரிய அணி வகுப்பின் சிறப்புகளை மோடியிடம் மெக்ரான் விளக்கினார்.
இந்திய முப்படைகளை சேர்ந்த 269 வீரர்கள் கொண்ட குழுவும் அணிவகுப்பில் கம்பீரமாக நடைபோட்டனர். இந்திய குழுவிற்கு பிரதமர் மோடி வணக்கம் தெரிவித்தார்.
அந்த சமயத்தில், வானில் பிரான்ஸ் விமானங்களுடன் சேர்ந்து இந்திய விமானப்படையின் ரபேல் விமானங்களும் சாகசங்களை நிகழ்த்தியது.
ஃபிரான்சிடம் இருந்து இந்திய கடற்படை செயல்திறனை உயர்த்த 26 ரஃபேல் விமானங்கள், 3 நீர்மூழ்கிக் கப்பல்களை
வாங்க பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணம் என்பது உலக வரலாற்றில் சிறப்பு மிக்க நிகழ்வாக இடம்பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
இந்த பூமிபந்தை அமைதியாகவும் வளமையாகவும் வைத்திருக்க, இந்தியா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்.
வலிமையான, நம்பகமான கூட்டாளியாக இருக்கும் பிரான்சுக்கு 140 கோடி இந்தியர்களும் எப்போதும் நன்றியுடன் இருப்பார்கள், இந்த பிணைப்பு மேலும் அதிகரிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.