உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரும், அர்ஜென்டினா அணியின் தலைவருமான லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமி கழகத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்டர் மியாமி கழகம் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி, அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் இணைந்துள்ளார். புளோரிடாவில் 20 ஆயிரம் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் புதிய அணிக்கான சீருடை மெஸ்சிக்கு வழங்கப்பட்டது.