கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேரின் பதவிக்காலம் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் முடிவடைகிறது. இதையடுத்து, காலியாகவுள்ள மாநிலங்களவை இடங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 24-ம் தேதி நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
மத்திய அமைச்சரான ஜெய்சங்கரின் பதவி காலம் ஆகஸ்டு 18-ம் தேதியுடன் முடியயுள்ள நிலையில், மத்திய வெளிஉறவு அமைச்சர் ஜெய்சங்கர் குஜராத்தில் கடந்த பதினொன்றாம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற ஜூலை 24-ம் தேதி நடத்தப்படுகிறது.
இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 11 பேர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதில் மாநிலங்களவை உறுப்பினராக ஜெய்சங்கர் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.