அமலாக்கத்துறை சோதனையில்
அமைச்சர் பொன்முடி வீட்டில் 13 இலட்சம் வெளி நாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது, ரூ. 81.7லட்சம் மதிப்புள்ள ரொக்கம், சொத்து ஆவணங்கள் முடக்கப்பட்டது, வங்கி கணக்கில் உள்ள ரூ.41.9 கோடி நிரந்த வைப்பு தொகை முடக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு முறைகேடான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு அமலாக்கத்துறை தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது வீடு, அலுவலகத்தில் நேற்று காலை முதல் இரவு வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை நடத்தினர். மேலும் சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர். நேற்று இரவு 7 மணி முதல் அதிகாலை மூன்று மணி வரை பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இன்று மாலையிலும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனிடம் விசாரணை நடைபெற்றது.
விசாரணைக்கு பின் அமலக்கத்துறை சோதனை போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்து விவரங்களை அறிவித்துள்ளது.
அமலாக்கத்துறை சோதனையில் 13 இலட்சம் வெளி நாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது, ரூ. 81.7லட்சம் மதிப்புள்ள ரொக்கம் சொத்து ஆவணங்கள் முடக்கப்பட்டது, வங்கி கணக்கில் உள்ள ரூ.41.9 கோடி நிரந்த வைப்பு தொகை முடக்கப்பட்டுள்ளது.