கடந்த சில வாரங்களாக டெல்லியில் பலத்த மழை பெய்துவந்தது. இந்நிலையில் டெல்லியை தொடர்ந்து மும்மையிலும் பலத்த காற்றுடன் மழைபெய்து வருகிறது.
மும்பையின் தானே பூனே உள்ளிட்ட நகரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் இந்திய வானிலை மையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மும்பையின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால், அங்கு போக்குவரத்துக்கு முடங்கியுள்ளது. பாந்தரா, செம்பூர், மாதுங்கா உள்பட மும்பையின் மையப் பகுதியானா பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் பெருகியது.
இதேபோல ரயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கியதால் மின்சார ரயில்கள் அரைமணிநேரம் தாமதமாக இயங்கியது. இதனால் பயணிகள் ரயில் நிலையங்களில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மும்பைக்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.