சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை செல்லும் விரைவு இரயில் வரும் ஜூலை 29-ஆம் தேதி முதல் சிவகாசியில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென்னக இரயில்வே சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்தியில், சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொல்லம் வரை செல்லும் கொல்லம் விரைவு இரயில் ஆனது நாள்தோறும் தினசரி இரயிலாக இயக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த இரயிலானது தினசரியாக நின்று செல்லும் தாம்பரம் , செங்கல்பட்டு, திண்டிவனம் , விழுப்புரம் உள்ளிட்ட வழித்தடங்களின் பட்டியலில் கூடுதலாக சிவகாசியும் இடம்பெற்றுள்ளது. இந்த விரைவு இரயில் வருகின்ற ஜூலை 29-ஆம் தேதியில் இருந்து அதிகாலை 1.52 மணியளவில் ஒரு நிமிடம் சிவகாசி இரயில் நிலையத்தில் நின்று செல்ல உள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.