மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள ஈ.எம்.ஆர்.எஸ்.களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பை பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கம் வெளியிட்டுள்ளது.
பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான பழங்குடி மாணவர்களுக்கான தேசியக் கல்வி சங்கம் (நெஸ்ட்) ஈ.எம்.ஆர்.எஸ்களுக்கான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை நியமனம் செய்து வருகிறது.
இதில் ஈ.எம்.ஆர்.எஸ்ஸில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத விடுதி காப்பாளர் பதவிக்கான 6329 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஈ.எம்.ஆர்.எஸ் பணியாளர் தெரிவுத் தேர்வு (ஈ.எஸ்.எஸ்.இ) -2023 க்கான அறிவிப்பை நெஸ்ட்ஸ் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் ஈ.எம்.ஆர்.எஸ்.களில் தரமான மனித வளம் நிலைநிறுத்தப்பட்டு, ஈ.எம்.ஆர்.எஸ்.களில் கல்வித் தரத்தை உயர்த்த முடியும்.
இதற்கான விண்ணப்ப நடைமுறை 19.07.2023-ல் தொடங்கியது.
சி.பி.எஸ்.இ.யுடன் இணைந்து நெஸ்ட்ஸ் இ.எஸ்.இ -2023-ஐ “ஓ.எம்.ஆர் அடிப்படையிலான முறையில் நடத்துகிறது. இது ஈ.எம்.ஆர்.எஸ்ஸில் ஆசிரியர் (டி.ஜி.டி) மற்றும் ஆசிரியர் அல்லாத விடுதிக் காப்பாளர் காலிப் பணியிடங்களை நிரப்புகிறது.
பதவி காலியிடங்கள், டிஜிடி 5660
விடுதிக் காப்பாளர் 669 என
மொத்தம் 6329 இடங்கள் உள்ளன.
emrs.tribal.gov.in. என்ற இணைய வலைதளத்தில்
19.07.2023 முதல் 18.08.2023 வரை விண்ணப்பங்களைப் பதிவேற்றமசெய்யலாம் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.