மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் 31 மசோதாக்கள் தாக்கல் செய்யப் மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.
மணிப்பூரில் இரண்டு பழங்குடி பெண்களுக்கு நடந்த வன்முறை குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.