சென்னை, அடையாறில் உள்ள ஐஐடியில் இன்று நடைபெற்ற 60-ஆவது பட்டமளிப்பு விழாவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2,573 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் பேசியதாவது,
கடந்த 60 ஆண்டுகளாக இந்திய நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஐஐடி மெட்ராஸ் பெரும் பங்களிப்பு அளித்து வருகிறது. மேலும், சமூகத்தின் அறிவியல் மாற்றத்திற்கும் இந்நிறுவனம் அதிக பங்களிப்பு அளித்து இருக்கிறது. இந்திய நாட்டில் மட்டுமின்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஐஐடி மாணவர்களின் பங்களிப்பு இருக்கிறது. இளம் ஆராய்ச்சியாளர்கள் தான் நம்முடைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிதளமாக இருக்கின்றனர். உலகை மாற்றும் ஆராய்ச்சியாளராக ஐஐடி மாணவர்கள் செயல்ப்பட்டு வருகிறார்கள்.
உங்கள் கண்டுப்பிடிப்பு சமூகத்திற்கு என்ன செய்யப்போகிறது என்று சிந்தித்து செயல் ஆற்றுங்கள். சட்டத்துறையில் தொழில் நுட்ப வளர்ச்சி பெரிய அளவில் இல்லை. ஐஐடி மெட்ராஸ் அறிவியல் ரீதியான ஆராய்சிகள் இந்திய சமூகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு அளித்துள்ளன. நம்முடைய சட்டமானது சுதந்திரம், சமூகநீதி ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கிறது. சமீபத்தில் வெளியான ஓபன்ஹைமர் திரைப்படம் வெளியானது. “அணுகுண்டின் தந்தை” எனப்படும் ராபர்ட் ஓபன்ஹைமர் வடிவமைத்த அணுக்குண்டின் தாக்கம் மற்றும் அதன் சவால்களை பற்றி கூறப்பட்டுள்ளது. அது ஆபத்து என்றாலும் அது எழுத்துமுறையில் அறிந்துக் கொள்ள வேண்டும்.
நவீன தொழில்நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயனளிக்க வேண்டும். வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில்நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும். காணொளி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேப்போல் செயற்கைக் நுண்ணறிவு தற்போது அதிகளவில் பயன்ப்படுத்தப்படுகிறது.
ஒரு கணினியால் எழுத முடிகிறது, வரைய முடிகிறது செய்திகளை அனுப்ப முடிகிறது. செயற்கை நுண்ணறிவுகள் நாம் கொடுக்கப்படும் உள்ளீடுகள் அடிப்படையில் செயல்படுவதால் அது ஒரு சார்பாக இருக்க கூடும் என்ற அச்சம்
ஏற்படுகிறது. ஏஐ (AI- Artificial intelligence) மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களால் ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஐஐடி நிர்வாகக் குழு தலைவர் பவன் கோயங்கா, இயக்குநர் வி.காமகோடி, பேராசியர்கள், மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
















