சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்று (ஜூலை 26) முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து, காணொலி காட்சி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து விசாரித்த நீதிபதி, அவரின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 8 ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் மூன்றாவது முறையாக நீட்டிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.