காமன்வெல்த் அமைப்பின் புதிய பொது செயலாளராக கானா நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷைர்லி அயோர்கோரர் போட்ச்வே அறிவிக்கப்பட்டுள்ளார்.
தென்பசிபிக் தீவு நாடான சமோவாவில் உள்ள அபியாவில், காமன்வெல்த் நாடுகளின் 2 நாள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளில், ஆபியா பெருங்கடல் பிரகடனம் அறிவிக்கப்பட்டது.
அதில், கடுமையான காலநிலை மாற்றம், மாசுபாடு மற்றும் அதிகப்படியான சுரண்டல் ஆகியவற்றை எதிர்கொண்டு கடல் வளத்தை பாதுகாக்க 56 உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.