நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும் என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணித்தவர் பிரதமர் நரேந்திர மோடி என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி உள்ளது.
VIDEO: PM Sh @narendramodi had made a prediction 5 years back about the opposition bringing a No confidence motion! pic.twitter.com/dz8McicQ40
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) July 26, 2023
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதிநிலை தாக்கல் கூட்டத்தொடரில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,
அதில் எதிர்க்கட்சிகள் 2023 ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவார்கள். அதற்கு முந்தைய ஆண்டு, 2018 ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இரண்டு நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும், தனது அரசு முறியடித்ததையும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த உரையில், எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், 2023 ஆம் ஆண்டில் மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு தயாராகுங்கள் என்று குறிப்பிட்டார்.
மக்களுக்கு சேவை செய்யவே, நாங்கள் இங்கே அமர்ந்திருக்கிறோம், ஆணவத்தின் விளைவால், 400 இருந்த நீங்கள் 40 ஆக குறைந்திருக்கிறீர்கள். இன்று எங்கே இருக்கிறீர்கள் இன்று பாருங்கள், என்று காங்கிரஸ் கட்சியை குறிப்பிடாமல் பேசி இருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறாக பேசிக் கொண்டிருந்த போது நாடாளுமன்றத்தில், சோனியா காந்தியும் அவையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.