வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் . அடுத்தபடியாக 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் பட்டியல் வெளியானது,
இதில் இந்திய அணியில் இருந்து, ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் அல்லது ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக் அல்லது ஜெய்தேவ் உனட்கட், முகேஷ்குமார் ஆகியோர் விளையாடவுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து, பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ், கேசி கர்டி, ஷாய் ஹோப் (கேப்டன்), ஹெட்மயர், ரோமன் பவெல் அல்லது ஆலிக் அதானேஸ், ரொமாரியோ ஷெப்பர்டு, கெவின் சின்கிளேர், அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி அல்லது யானிக் காரியா அல்லது ஒஷானே தாமஸ், ஜெய்டன் சீலஸ் ஆகியோர் விளையாடவுள்ளனர். இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடக்கம்.