தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது பிரதமர் நரேந்திர மோடியை 3-வது முறையாக பிரதமராக்கவே இந்த பாதயாத்திரை என்றார்.
இராமேஸ்வரத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை நாளை மாலை 4:30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். மிக முக்கியமாக 2024 பாராளுமன்றத்தில் முன் என் மண் என் மக்கள் என்ற பிரதமர் மோடியின் தமிழ் முழக்கம் என்ற இந்த யாத்திரை 234 சட்டமன்றத்தொகுதிகளுக்கும் செல்ல இருக்கிறது.
பாதயாத்திரையின் தொடக்க விழாவில் பிரதமர் மோடியின் சாதனை குறித்து விளக்க புத்தகம் வெளியிடப்படுகிறது. பிரதமர் மோடியின் சாதனை விளக்க புத்தகம், ஒரு லட்சம் பிரதிகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. சட்டசபைத் தொகுதி வாரியாக நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கையேடும் வெளியிடப்படுகிறது. பாரத பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்பதை இந்த யாத்திரை நிச்சயம் உறுதி செய்யும். பாதயாத்திரையின் போது 10 இடங்களில் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் என்று தெரிவித்தார்.
எல்லா இடங்களிலும் பாஜகவின் மூத்த தலைவர்கள் இந்த யாத்திரையை வழி நடத்துவார்கள். 5 கட்டங்களாக நடைபெறும் என மண் என மக்கள் இந்த யாத்திரை ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை முதல் கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட யாத்திரைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார்.
2024 ஜனவரி 11ம் தேதி வரை 168 நாட்கள் 1700 கிலோ மீட்டர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடைபயணமாகவும் 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் பாதயாத்திரை நடைபெறும்.