டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி பிரகதி மைதானத்தில் உள்ள, சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை நேற்று திறந்து வைத்தார். அதற்கு “பாரத் மண்டபம்” என பெயர் சூட்டினார். 2700 கோடி ரூபாய் செலவில் ஒரு தேசிய திட்டமாக உருவாக்கப்பட்ட, இந்த மண்டபம், 123 ஏக்கர் பரப்பளவு கொண்து. ஐ.இ.சி.சி வளாகம் இந்தியாவின் மிகப்பெரிய கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள், கருத்தரங்குங்கள், நடத்த அதிநவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,
பிரதமராக தனது மூன்றாவது பதவி காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என உறுதியளித்தார். இந்தியா தலைமையிலான ஜி 20 மாநாடு
இந்த பாரத் மண்டபத்தில், வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள் இந்த மையம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை முடக்க முயற்சி செய்தனர். கடமைப் பாதையின் மகத்துவத்தை தனிப்பட்ட முறையில் ஏற்றுக் கொள்வது போல எதிர்மறை சிந்தனையாளர்களின் மனம் ஒருநாள் பாரத மண்டபத்தை அங்கீகரிக்கும். எனது தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு பதவி ஏற்ற போது இந்திய பொருளாதாரம் உலக அளவில் பத்தாவது இடத்தில் இருந்தது தற்போது அது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
எனது மூன்றாவது பதிவிக்காலத்தில் இந்தியா உலக அளவில் பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் மூன்று இடங்களுக்குள் இடம்பெறும். புதிதாக கட்டப்பட்ட பாரத் மண்டபம் ஜி-20 மாநாட்டை நடத்தும் போது இந்தியா உயரும் உயரத்தை உலகம் காணும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை அடைய வேண்டும். இந்தியா 13.5 கோடி ஏழைகளை வறுமைக்கோட்டில் இருந்து வெளியே கொண்டு வந்திருப்பதாக நிதி ஆயோக்கின் சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது, இதன் மூலம் வறுமையை ஒழிக்க நிச்சயம் இந்தியாவால் முடியும்.
74 புதிய விமான நிலையங்கள், 11 புதிய பசுமை விமான நிலையங்கள், இரயில் பாதை மின்மயமாக்கம், எரிவாயு விநியோகம் வரை அனைத்து துறைகளிலும் கடந்த 9 பசுமை ஆண்டுகளில் முன்னேறி உள்ளது. முதலில் நாடு, முதலில் குடிமகன் என்ற கொள்கையில் பணி செய்து இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.