மகாராஷ்டிரா மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை விரைவு இரயில், பல்கார் இரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 5.23 மணி அளவில் வந்திருந்த போது, அதில் பயணித்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் பலியாளர்கள்.
துப்பாக்கி சூடு நடத்தி விட்டு ரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற ரயில்வே பாதுகாப்பு படை வீரரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரயில்வே பாதுகாப்பு படை வீரரை போரிவலி காவல் நிலையத்தில் வைத்து, விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூட்டிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இந்த துப்பாக்கி சுட்டில் மூன்று பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. b5 பெட்டியில் இந்த துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளது. ஓடும் ரயிலில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூடு, இரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.