மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. 23 நாட்களில் மொத்தம் 17 அமர்வுகள் நடைபெற உள்ளன. இதுவரை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்கும்படி தொடர் போராட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே, எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.