என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று மூன்றாவது நாளாக முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மக்களைச் சந்தித்தார்.
இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை இராமநாதபுரத்தில் தொண்டர்களுடனும் கிராம மக்களுடனும் சேர்ந்து கேட்டது மகிழ்ச்சியைத் தந்தது என்று அண்ணாமலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் செல்வநாயகபுரம் கிராம மக்களுடன் அமர்ந்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் 103 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்தோம்.
தமிழ்நாடு வடவள்ளியைச் சேர்ந்த ஓவியர் திரு சுரேஷ் ராகவன் அவர்களை, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிட்டுப் பேசியது, நமக்கெல்லாம் மிகுந்த பெருமை. திரு சுரேஷ் ராகவன் அவர்கள், பறவைகள், விலங்குகள் ஓவியங்களை வரைவதோடு, அவற்றைப் பற்றிய தகவல்களையும் ஓவியங்கள் மூலம் ஆவணமாக்கி வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் செல்வநாயகபுரம் கிராம மக்களுடன் அமர்ந்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் 103 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்தோம்.
தமிழ்நாடு வடவள்ளியைச் சேர்ந்த ஓவியர் திரு சுரேஷ் ராகவன் அவர்களை, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள்… pic.twitter.com/8ievZtyQvh
— K.Annamalai (@annamalai_k) July 30, 2023
நம் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளை நினைவுகூரும் விதமாக, ‘என் மண் என் தேசம்’ திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள லட்சக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துகளில் சிறப்புக் கல்வெட்டுகள் நிறுவப்படும் என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 7500 கலசங்களில் மண் மற்றும் மரக்கன்றுகள் கொண்டு வந்து, தேசிய போர் நினைவிடம் அருகே நடப்படும் என்றும் மாண்புமிகு பிரதமர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் புகழ் இதன் மூலம் நாட்டிற்கே தெரியப்படுத்தப்படும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளில், பழமையான சோழர் காலத்துச் சிற்பங்கள், கலைப் பொருள்களை, பிற நாடுகளிலிருந்து மீட்டுக் கொண்டு வந்துள்ளதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டும் வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றி நம் நாட்டைப் பெருமைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் நல்லாட்சியில், நம் நாடு, ஒரே பாரதம் உன்னத பாரதமாக ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதில் பெரும் மகிழ்ச்சி.