கேரள மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் வனப்பகுதியில் புலி உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
இதையடுத்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வனவிலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டது .
அந்த அறிக்கையில் குறிப்பிட்ட படி இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இணைந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வனவிலங்கு கணக்கெடுப்பு எடுப்பதாகவும். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கிய இந்த கணக்கெடுப்பு மொபைல் ஆப் மூலம் பதிவு செய்யப்படும்.
இந்தக் கணக்கெடுப்புக்காக முதலில் புலிகளுக்கு உணவாகும் விலங்குகளின் இருப்பு, புலிகளின் கால் அடையாளம், புலிகளின் எச்சம், மரத்தில் புலிகள் ஏற்படுத்தும் அடையாளங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் புலிகளின் பயணப் பாதையை உறுதி செய்து கேமிராக்கள் பொருத்தப்படும். குறிப்பிட்ட நாட்களுக்குப் பின் கேமராக்களிள் பதிவான காட்சிகள் மதிப்பீடு செய்து இதன் மூலம் புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.
அதன் அடிப்படையில் தற்போது கேரளா மாநில வனப்பகுதியில் 213 புலிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் 190 புலிகள் இருந்த நிலையில் தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதில் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் தற்போது 31 புள்ளிகள் உள்ளன. பெரியாறு புலிகள் காப்பகத்தில் 30 புலிகள் உள்ளன. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பகுதிகளிலும் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன. இங்கு புதிய ஆய்வு அடிப்படையில் 1087 புலிகள் உள்ளன.
2018 ஆம் ஆண்டு 981 புலிகள் இருந்து வந்தன . இந்நிலையில் தற்போது புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன.