சந்திராயன் – 3 எடுத்த நிலவின் காணொளி: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!
Sep 16, 2025, 02:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திராயன் – 3 எடுத்த நிலவின் காணொளி: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Web Desk by Web Desk
Aug 8, 2023, 11:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் – 3 விண்கலம், நிலவின் மேற்பரப்பைக் காணொளியாக எடுத்து அனுப்பி இருக்கிறது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளிடம்  மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் -2 விண்கலம், நிலாவில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. எனினும், மனம் தளராத இஸ்ரோ விஞ்ஞானிகள் 4 ஆண்டுகள் இடைவிடாத தொடர் முயற்சிக்குப் பிறகு, சந்திராயன் -3 விண்கலத்தை உருவாக்கி கடந்த மாதம் 14-ம் தேதி நிலவின் தென் துருவத்துக்கு அனுப்பினர்.

இந்த விண்கலம் தனது 23 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, கடந்த 5-ம் தேதி இரவு 7 மணியளவில் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. தற்போது, நிலவின் சுற்று வட்டப் பாதையில் பயணித்து வரும் சந்திராயன் -3 விண்கலம், நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைந்த காணொளியை இஸ்ரோ கட்டுபாட்டு அறைக்கு அனுப்பி இருக்கிறது. இந்தக் காணொளியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த காணொளி பதிவை Retweet செய்து சிங்கப்பூர் தூதர் சைமன் வாங் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் “சந்திரயான்-3 நிலவு நெருங்கும் கட்டத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். என்ன ஒரு சிறந்த புகைப்படம்! ” என்று தெரிவித்தார்.

Big congratulations to the Chandrayaan-3 moon insertion phase. What a great pic ! HC Wong https://t.co/ogeExbXq6r

— Singapore in India (@SGinIndia) August 7, 2023

நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சுற்றி வரும் சந்திரயான் -3 விண்கலம், அதிகபட்சம் 18,072 கிலோ மீட்டர், குறைந்தபட்சம் 114 கிலோ மீட்டர் என்ற அளவில் நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றி வந்தது. இதனுடைய உயரத்தை குறைக்கும் சவாலான பணியில் பெங்களூரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு அதனுடைய உயரத்தை குறைத்து உள்ளனர்.

இதனால், விண்கலம் திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் மென்மையான முறையில் தரையிறக்கம் செய்ய முயற்சி செய்யப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: chandrayaan 3 newschandrayaan 3 moon missionisro moon mission chandrayaan 3chandrayaan 3 launch liveChandrayan 3Chandrayaan 3chandrayaan 3 updatechandrayaan 3 launchchandrayaan 3 latest news
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விடிய விடிய விசாரணை!

Next Post

இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஒரு புரட்சி – ஜிசாட் -24

Related News

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு : பிரிட்டனில் பெரிய பேரணி – என்னவாகும் எதிர்காலம்?

பண்டப்பரிமாற்ற முறையை கையிலெடுத்த ரஷ்யா : அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள்!

டிரம்பின் வரிவிதிப்பு – இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரிப்பு!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE – இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

டாப் கியரில் கார்களை வாங்கிக்குவிக்கும் புருனே மன்னர் : 7,000 கார்களுக்கு சொந்தக்காரரான ஹசனல் போல்கியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

பீகாரிலிருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

வெனிசுலாவில் பொதுமக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!

குலசேகரப்பட்டினத்தில் செப்.23ல் தசரா விழா : அதிகாலை 6 மணிக்கு கொடியேற்றம்!

இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர்!

ஸ்பெயின் : சைக்கிள் பந்தயத்தில் திடீரென சாலையை மறித்து போராட்டம் நடத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies