தெற்கு இரயில்வே வார இறுதி நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆகஸ்டு11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வார இறுதி நாட்கள், சுதந்திரம் தினம், தொடர் விடுமுறை என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்குச் செல்வோர்களுக்கு ஏதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இந்நிலையில், பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க தாம்பரம் நெல்லை இடையே நாளை மற்றும் மறுநாள் சிறப்பு கட்டணச் சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளது. நாளை தாம்பரத்தில் மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயில் (வண்டி எண் 06051) மறுநாள் காலை 4.15க்கு ரயில் நெல்லையை சென்றடையும். இதேபோல் நெல்லையில் 12-ஆம் தேதி மாலை 5.50க்கு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 4.10க்கு தாம்பரம் சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி இரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்று செல்லும் என்றும் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய இரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.