பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் படுமோசமான விசாரணை: உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!
Jan 20, 2026, 10:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் படுமோசமான விசாரணை: உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 10, 2023, 08:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில், படுமோசமாக விசாரணை நடந்திருக்கிறது என்று அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 2001-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில், 2002-ம் ஆண்டு பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு, முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில் 172 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி வசந்த லீலா, போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி, பொன்முடியையும், அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை.

இந்த நிலையில்தான், மேற்கண்ட வழக்கை தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இவ்வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “இதுவரை நான் பார்த்ததில் படுமோசமாக விசாரிக்கப்பட்டதால்தான் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன். இந்த மனு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடுகிறேன்” என்று கூறி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இவ்வழக்கால், அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Tags: Ponmudicourtchennai high courtMinister Ponmudi
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டில் பாரத அன்னைக்குப் பூஜை செய்வது தடுப்பு : பிரதமர் மோடி காட்டம்.

Next Post

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி!

Related News

ஆற்றுத்திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர விபத்து – பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல்!

அமைதிப் பூங்காவான தமிழகத்தை அச்சம் நிறைந்த பூமியாக்கியது தான் திமுக அரசின் சாதனை!

பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அறிவுறுத்தல் நிராகரிப்பு – சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ விருது!

அடுத்த மாதம் முதல் ரூ. 2,500 : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் – ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்

விஜய் மீது அவதூறு பரப்பும் திமுக ஆதரவு ஊடகங்கள் – நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு – விஜய்யிடம் 5 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழா நிபந்தனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மைதானம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்!

பழுதடைந்த பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சத்துணவு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – நயினர் நாகேந்திரன் வலியுறுத்தல்!

பாஜக தேசிய தலைவராக இன்று பதவியேற்கிறார் நிதின் நபின் – விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் – ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது!

பயங்கரவாதத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த முடிவு – பிரதமர் மோடி, UAE அதிபர் பேச்சுவார்த்தை குறித்து விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies