பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் படுமோசமான விசாரணை: உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!
Jun 6, 2026, 05:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் படுமோசமான விசாரணை: உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 10, 2023, 08:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில், படுமோசமாக விசாரணை நடந்திருக்கிறது என்று அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 2001-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில், 2002-ம் ஆண்டு பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு, முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில் 172 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி வசந்த லீலா, போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி, பொன்முடியையும், அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை.

இந்த நிலையில்தான், மேற்கண்ட வழக்கை தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இவ்வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “இதுவரை நான் பார்த்ததில் படுமோசமாக விசாரிக்கப்பட்டதால்தான் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன். இந்த மனு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடுகிறேன்” என்று கூறி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இவ்வழக்கால், அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

Tags: Ponmudicourtchennai high courtMinister Ponmudi
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டில் பாரத அன்னைக்குப் பூஜை செய்வது தடுப்பு : பிரதமர் மோடி காட்டம்.

Next Post

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி!

Related News

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies