தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா… மாநிலங்களவையில் தாக்கல்!
May 20, 2025, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா… மாநிலங்களவையில் தாக்கல்!

Web Desk by Web Desk
Aug 11, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களைப்  பரிந்துரைக்கும் 3 பேர் அடங்கிய குழுவில் இருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை, இதுவரை மத்திய அரசு பரிந்துரையின் பேரிலேயே நியமிக்கப்பட்டு வந்தனர்.  ஆனால், இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுதான் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களைத்  தேர்வு செய்ய வேண்டும் என்று  கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. மேலும் அப்போது, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை இந்த விதிமுறையே தொடரும் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக புதிய மசோதாவை  மாநிலங்களவையில் தாக்கல் செய்திருக்கிறது. இந்த மசோதாவில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கவிட்டு, அதற்குப் பதிலாக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே 2024 பிப்ரவரி மாதம் ஓய்வு பெறுகிறார். இதனால், தேர்தல் ஆணையர் குழுவில் ஒரு காலியிடம் ஏற்படும். இந்த சூழலில், மேற்கண்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால் புதிய தேர்தல் ஆணையரைப்  புதிய தேர்வுக்குழுவே தேர்வு செய்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும்.

Tags: bjpElection commissionCongressElection commissionercommissioner
ShareTweetSendShare
Previous Post

வீடு தேடி வருகிறது மத்திய அரசின் நலத்திட்டங்கள் : அண்ணாமலை

Next Post

சுதந்திர தின விழா பாதுகாப்பில் குளறுபடி: முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு!

Related News

கர்நாடகாவில் மே.26 வரை கனமழைக்கு வாய்ப்பு!

காசாவை முழுமையாக கைப்பற்றுவோம் : இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!

நீதிபதி பணியில் சேர 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

பெங்களூருவில் : ஐடி நிறுவனத்தின் காம்பவுண்ட் சுவர் இடிந்து பெண் தூய்மை பணியாளர் பலி!

விளையாட்டு வீரர்களுக்கு டெல்லி அரசு உரிய வசதிகள் வழங்கும் : முதலமைச்சர் ரேகா குப்தா

உத்தரப்பிரதேசம் : அனுமன் கோவிலில் திரளான பக்தர்கள் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் திருட்டு!

திருமண வாழ்வின் நிலைக்கு 3-வது நபரே காரணம் : ரவி மோகனின் மனைவி ஆர்த்தி விளக்கம்!

தங்க நகை கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள் : ரிசர்வ் வங்கி

கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு!

கோயில்களில் ஒரு கால பூஜை : அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

மகாராஷ்டிரா : கொரோனா தொற்று காரணமாக இருவர் பலி!

கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை : மத்திய அரசு

பல்லடம் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

தேவகவுடாவுக்கு ஜெகதீப் தன்கர் பிறந்தநாள் வாழ்த்து!

ED அறிக்கையால் திமுக அரசுக்கு பதற்றம் : எச். ராஜா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies