லூனா -25 இஸ்ரோ வாழ்த்து.
Aug 17, 2025, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லூனா -25 இஸ்ரோ வாழ்த்து.

Web Desk by Web Desk
Aug 11, 2023, 07:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் – 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. இதன் மூலம், நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா சாதனை படைத்திருக்கிறது.

நிலவை ஆய்வு செய்வதற்காக, 2008-ம் ஆண்டு சந்திராயன் -1 விண்கலத்தையும், 2019-ம் ஆண்டு சந்திராயன் – 2 விண்கலத்தையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பியது. எல்லா நாடுகளும் நிலவின் வடதுருவ பகுதியில் ஆய்வு நடத்தி வரும் நிலையில், தென்துருவத்தை ஆராய இந்தியா சந்திரயான் -2-ஐ அனுப்பியது. ஆனால், நிலவில் தரையிறங்கியபோது தரையிறங்கும் கருவி வேகமாக தரை இறங்கியதால் சேதம் அடைந்து கட்டுப்பாட்டை இழந்தது.

இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் இடைவிடாத முயற்சியின் பலனாக மீண்டும் சந்திரயான் -3 விண்கலத்தை உருவாக்கி கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி நிலவின் தென்துருவ பகுதிக்கு அனுப்பியது. இதுதான் இன்று வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்திருக்கிறது. இதன் மூலம் திட்டமிட்டபடி, வரும் 23-ம் தேதி சந்திரயான் -3 விண்கலம் நிலவில் கால் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சந்திராயானை தொடர்ந்து ரஷியாவும் நிலவின் தென் துருவத்தை நோக்கி லூனா-25 என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் இந்தியாவின் இஸ்ரோ அண்மையில் அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் முன்னரே தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என்று தெரிகிறது.

இது குறித்து ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி அலெக்ஸாண்டர் ப்ளோகின் கூறுகையில், “லூனா-25 விண்கலம் இன்னும் 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன் பின்னர் 7 நட்கள் நிலவு சுற்றுப்பாதையில் பயணித்து சரியான இலக்கை தேர்வு செய்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். வரலாற்றில் முதன்முறையாக நிலவின் தென் துருவத்தில் இந்த விண்கலம் தரையிறங்கவுள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

உறுதி செய்த ரோஸ்கோஸ்மோஸ்: சோயஸ் 2.1வி (Soyuz 2.1v) ராக்கெட் மூலம் லூனா-25 விண்கலம் மாஸ்கோவின் கிழக்கே 5,550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) ரஷ்ய நேரப்படி அதிகாலை 2.10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. லூனா-25 வெற்றிகரமாக ஏவப்பட்டதை, ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் ரோஸ்காஸ்மோஸ் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் ரஷியாவின் லூனா ஏவுகணை பயணம் வெற்றி அடைய இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில்
” ரோஸ்கோஸ்மோஸின் லூனா-25 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு வாழ்த்துகள் எனவும், நமது விண்வெளிப் பயணத்தில் மற்றொரு சந்திப்பு இடம் பெறுவது மிகவும் அற்புதம்” என வாழ்த்து தெரிவித்தது .

Congratulations, Roscosmos on the successful launch of Luna-25 💐

Wonderful to have another meeting point in our space journeys

Wishes for
🇮🇳Chandrayaan-3 &
🇷🇺Luna-25
missions to achieve their goals.

— ISRO (@isro) August 11, 2023

Tags: ISROisro moon mission chandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

ஆன்லைன் சூதாட்டத்துக்கு 28% ஜி.எஸ்.டி.: நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Next Post

இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறுமா? – பலப்பரீட்சையில் இன்று…

Related News

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

அலாஸ்காவில் நடக்க முடியாமல் தடுமாறிய ட்ரம்ப்!

உக்ரைன் போரை நிறுத்தினால் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன் – ஹிலாரி கிளிண்டன்

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை -155 பாக் வீரர்கள் உயிரிழந்தது அம்பலம்!

கோவை அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்!

கோவை ரத்தினபுரியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா – கிருஷ்ணர், ராதை வேடங்களில் குழந்தைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies