ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில். நேற்றுமுன் தினம் நடந்த ஒரு போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
இதன் பின்னர், பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் முன்னேறி, 2ம் இடத்தில் மலேசியாவும், 3ம் இடத்தில் தென் கொரியாவும், 4வது இடத்தில் ஜப்பான் என்ற அடிப்படையில் 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியது.
இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் மலேசியா, தென் கொரியா அணிகள் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதியில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
ஜப்பானை வீழ்த்தி இந்தியா வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு இந்திய ஹாக்கி இரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரராக இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் உள்ளார். அவர் 7 கோல்களை அடித்து உள்ளார். இந்த 7 கோல்களையும் அவர் பெனால்டி கார்னர் மூலமே அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதி போட்டிக்கு முன்பு மாலை 3.30 மணிக்கு 5-வது இடத்துக்கு பாகிஸ்தான்-சீனா அணிகள் மோதுகின்றன