வெங்காயம் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை !
Sep 12, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெங்காயம் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை !

Murugesan M by Murugesan M
Aug 11, 2023, 08:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெங்காய விலையைக் கட்டுப்படுத்த 3 லட்சம் மெட்ரிக் டன் வெங்காய  கையிருப்பை விடுவிக்க மத்திய நுகர்வோர் விவகாரத் துறை முடிவு செய்துள்ளது. இத்துறையின் செயலாளர் ரோஹித் குமார் சிங் 10.08.2023 அன்று தேசிய வேளாண் கூட்டமைப்பு (நாஃபெட்) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்.சி.சி.எஃப்) அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து இதற்கான வழிமுறைகளை இறுதி செய்தார்.

வெங்காயத்தின் சில்லறை விலை அகில இந்திய அளவில் சராசரியை விட, விலை அதிகமாக இருக்கும் மாநிலங்களில்  உள்ள முக்கிய சந்தைகளில் வெங்காய இருப்பை விடுவித்து விற்பனைச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் தளங்களில் மின் ஏலம் மற்றும் சில்லறை விற்பனை செய்வது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. நுகர்வோருக்கு மலிவு விலையில் வெங்காயம் கிடைக்கச் செய்யும் நோக்கில், விற்பனையின் அளவு மற்றும் வேகம் ஆகியவை, விலை மற்றும் கிடைக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அளவீடு செய்யப்படும்.

நடப்பாண்டில், மொத்தம், 3 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், இது மேலும் அதிகரிக்கப்படலாம். மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தலா 1.50 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை நாஃபெட் மற்றும் என்.சி.சி.எஃப் ஆகிய இரண்டு மத்திய ஒருங்கிணைப்பு முகமைகள் கொள்முதல் செய்துள்ளன.

கடந்த 4 ஆண்டுகளில் வெங்காய கையிருப்பு அளவு மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் 1 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 3 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. நுகர்வோருக்கு மலிவு விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்வதிலும், விலை ஸ்திரத்தன்மையை பராமரிப்பதிலும் வெங்காய கையிருப்பு அளவு முக்கிய பங்கு வகிக்கிறது.

Tags: IndiaOnionOnion RateOnion StackStack
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறுமா? – பலப்பரீட்சையில் இன்று…

Next Post

பஞ்சாப் எல்லையில் ஊடுருவல்: பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies