நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் – 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. இதன் மூலம், நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா சாதனை படைத்திருக்கிறது.
நிலவை ஆய்வு செய்வதற்காக, 2008-ம் ஆண்டு சந்திராயன் -1 விண்கலத்தையும், 2019-ம் ஆண்டு சந்திராயன் – 2 விண்கலத்தையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பியது. எல்லா நாடுகளும் நிலவின் வடதுருவ பகுதியில் ஆய்வு நடத்தி வரும் நிலையில், தென்துருவத்தை ஆராய இந்தியா சந்திரயான் -2-ஐ அனுப்பியது. ஆனால், நிலவில் தரையிறங்கியபோது தரையிறங்கும் கருவி வேகமாக தரை இறங்கியதால் சேதம் அடைந்து கட்டுப்பாட்டை இழந்தது.
இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் இடைவிடாத முயற்சியின் பலனாக மீண்டும் சந்திரயான் -3 விண்கலத்தை உருவாக்கி கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி நிலவின் தென்துருவ பகுதிக்கு அனுப்பியது. இதுதான் இன்று வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்திருக்கிறது. இதன் மூலம் திட்டமிட்டபடி, வரும் 23-ம் தேதி சந்திரயான் -3 விண்கலம் நிலவில் கால் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சந்திராயானை தொடர்ந்து ரஷியாவும் நிலவின் தென் துருவத்தை நோக்கி லூனா-25 என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் இந்தியாவின் இஸ்ரோ அண்மையில் அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் முன்னரே தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி அலெக்ஸாண்டர் ப்ளோகின் கூறுகையில், “லூனா-25 விண்கலம் இன்னும் 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன் பின்னர் 7 நட்கள் நிலவு சுற்றுப்பாதையில் பயணித்து சரியான இலக்கை தேர்வு செய்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். வரலாற்றில் முதன்முறையாக நிலவின் தென் துருவத்தில் இந்த விண்கலம் தரையிறங்கவுள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
உறுதி செய்த ரோஸ்கோஸ்மோஸ்: சோயஸ் 2.1வி (Soyuz 2.1v) ராக்கெட் மூலம் லூனா-25 விண்கலம் மாஸ்கோவின் கிழக்கே 5,550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) ரஷ்ய நேரப்படி அதிகாலை 2.10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. லூனா-25 வெற்றிகரமாக ஏவப்பட்டதை, ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் ரோஸ்காஸ்மோஸ் உறுதிப்படுத்தியது.
இந்நிலையில் ரஷியாவின் லூனா ஏவுகணை பயணம் வெற்றி அடைய இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில்
” ரோஸ்கோஸ்மோஸின் லூனா-25 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு வாழ்த்துகள் எனவும், நமது விண்வெளிப் பயணத்தில் மற்றொரு சந்திப்பு இடம் பெறுவது மிகவும் அற்புதம்” என வாழ்த்து தெரிவித்தது .
Congratulations, Roscosmos on the successful launch of Luna-25 💐
Wonderful to have another meeting point in our space journeys
Wishes for
🇮🇳Chandrayaan-3 &
🇷🇺Luna-25
missions to achieve their goals.— ISRO (@isro) August 11, 2023