நேற்று நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பட்டத்தை வென்றதன் மூலம், சர்வதேச ஹாக்கி அணிகள் தரவரிசை பட்டியலில் இந்திய ஆண்கள் அணி 3-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஹாக்கி போட்டியின் 7வது தொடர் நடந்து முடிந்து இருக்கிறது. இறுதிப் போட்டியில் மலேசியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் ஆசிய ஹாக்கி போட்டியில் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்று இருக்கிறது.
இதன் தொடற்சியாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 4-வது முறை (2011, 2016, 2018, 2023) கோப்பையை வென்ற முதல் அணி என்கிற பெருமையை இந்தியா ஹாக்கி அணி பெற்று இருக்கிறது. மேலும் இதன் மூலம், சர்வதேச ஹாக்கி அணிகளின் தரவரிசைப் பட்டியலில் 2771.35 புள்ளிகளுடன் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியது.
சர்வதேச அளவில் நெதர்லாந்து (3095.90) முதலிடத்திலும், பெல்ஜியம் (2917.87) இரண்டாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.