கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஹிந்துக் கோவிலுக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தி, சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். இந்தாண்டில் மட்டும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மூலம் கனடாவில் ஹிந்து கோவில் அவமதிக்கப்படுவது இது நான்காவது முறையாகும்.
கனடா, பிரிஸ்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் சார்ரே நகரில் லஷ்மி நாராயணர் கோயில் பிரசித்திபெற்றது. இந்த கோவில் கனடாவில் உள்ள பழமையான கோவில்கள் பட்டியலில் இதுவும் ஒன்று.
கோவிலின் நுழைவு வாயிலில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சுவரொட்டிகள் ஒட்டிவிட்டு, கோவிலில் உள்ள பொருட்களைச் சேதப்படுத்தி விட்டுச் சென்றனர். இது அங்குள்ள கண்காணிப்பு படக்கருவியில் பதிவாகியிருந்தது.
அந்த சுவரொட்டியில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என கனடா அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கு முன்பு ஒண்டரியோ பகுதியிலுள்ள சுவாமிநாராயண் கோயிலில் ஏப்ரல் மாதம் காலிஸ்தான் அட்டூழியம் நடந்தது. மிஸ்ஸிஸாகுவா பகுதியிலுள்ள இராமர் கோயிலில் பிப்ரவரி மாதமும், பிராம்டன் பகுதியிலுள்ள கோவிலிலும் காலிஸ்தான் அவமதிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.