நாட்டிற்காக வாழ்வதை யாரும் தடுக்க முடியாது: அமித்ஷா!
Sep 12, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டிற்காக வாழ்வதை யாரும் தடுக்க முடியாது: அமித்ஷா!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 13, 2023, 04:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு சுதந்திரம் அடைந்து விட்டதால், இனி நாட்டிற்காக யாரும் உயிர் தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதேசமயம், நாட்டிற்காக வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவு விழாவை அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடும்படி பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், இதையொட்டி, ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வீடுதோறும் தேசியக் கொடியேற்றி கொண்டாடுமாறும், கொடியேற்றும்போது எடுத்த புகைப்படங்களை ஹர் ஹர் திரிங்கா இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படியும் நாட்டு மக்களை பிரதமர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. நாடு சுதந்திரம் அடைந்து விட்டதால், இனி நாட்டிற்காக யாரும் உயிர்த் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதேசமயம், நாட்டுக்காக வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது.

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, கடந்தாண்டு சுதந்திரத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றாத வீடுகளே இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடியை ஏற்றும்போது, ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமையும் வெளிப்படும். சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில் இந்தியா அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்றார்.

2 நாள் பயணமாக குஜராத் சென்றிருக்கும் அமித்ஷா, நேற்று அரபிக் கடலில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சர் கிரீக், ஹராமி நாலா பகுதிகளை பார்வையிட்டு, பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்தார். மேலும், எல்லை பாதுகாப்புப் படைக் கப்பல்கள், படகுகளை நிறுத்தக் கூடிய, மூரிங் பிளேஸ் தளத்துக்கும் அமித்ஷா பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டியவர், எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடினார். இது தவிர, கட்ச்சில் இருந்து பல்வேறு திட்டங்களை காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

Tags: bjpAmitshahBJP AmitshahMinister Amitshah
Share
Tweet
SendShare
Previous Post

செந்தில் பாலாஜி தம்பி கைது: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!

Next Post

காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடா ஹிந்து கோவிலில் அத்துமீறல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies