சுதந்திர தினத்தையொட்டி 954 காவல்துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்கள்- மத்திய அரசு அறிவிப்பு
Oct 26, 2025, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தினத்தையொட்டி 954 காவல்துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்கள்- மத்திய அரசு அறிவிப்பு

Web Desk by Web Desk
Aug 14, 2023, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திர தின 2023 சுதந்திர தினத்தையொட்டி 954 காவல்துறை பணியாளர்களுக்கு காவல்துறை பதக்கங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
வீர தீர செயல்களுக்கான  குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம் சிஆர்.பிஎப் வீரர் ஒருவருக்கும்,  வீர தீர செயல்களுக்கான காவல் பதக்கங்கள்  229 பேருக்கும், மிகவும் சிறப்பு மிக்க குறிப்பிடத்தக்க  சேவைக்கான காவல் பதக்கங்கள் 82 பேருக்கும், சிறந்த சேவைக்கான காவல் பதக்கம்  642 பேருக்கும் வழங்கபட உள்ளது.

வீர தீர செயல்களுக்கான காவல் பதக்கம் விருது பெறும் 230 பணியாளர்களில் 125 பணியாளர்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள். ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த 71 பணியாளர்கள், வடகிழக்குப் பிராந்தியத்தைச்சேர்ந்த 11 பணியாளர்களுக்கு வீர தீர செயல்களுக்கான காவல் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
வீர தீர செயல்களுக்கான விருதுகளை பெறும் பணியாளர்களில் சிஆர்பிஎப்- சேர்ந்த 28 பேர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 33 பேர், ஜம்மு காஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்த  55 பேர், சத்தீஷ்கரைச் சேர்ந்த 24 பேர், தெலங்கானாவைச் சேர்ந்த 22 பேர், ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 18 பேர் இடம்பெற்றுள்ளனர். மற்றவர்கள் இதர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

உயிர் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றுதல், குற்றத்தைத் தடுப்பது அல்லது குற்றவாளிகளைக் கைது செய்தல் ஆகியவற்றில் வெளிப்படையான வீரத்தின் அடிப்படையில் வீரத்திற்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம், மிகவும் சிறப்பு மிக்க குறிப்பிடத்தக்க  சேவைக்கான காவல் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. குடியரசுத் தலைவரின் சிறப்பான சேவைக்கான காவல் பதக்கம், காவல் துறை சேவையில் சிறப்பான சாதனைக்காகவும், திறமையான சேவைக்கான காவல் பதக்கம், கடமையில் அர்ப்பணிப்புடன் கூடிய மதிப்புமிக்க சேவைக்காகவும் வழங்கப்படுகின்றது.

தமிழ்நாட்டின் பெருநகர சென்னையில் காவல் துறை துணை ஆணையர் திரு எஸ். அரவிந்த், தமிழ்நாட்டின் தருமபுரியைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு என். ஸ்டீபன் ஜேசுபதம், தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு பி தங்கதுரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை உதவி ஆய்வாளர் திரு எஸ். அனந்தராமன், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் திரு என் பாலசுப்பிரமணியன், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த  காவல் துறை துணை ஆய்வாளர் திரு ஹெச். கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாட்டின் பெரம்பலூர் காவல் துறை கூடுதல் ஆய்வாளர் திரு மதியழகன்,  தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் திரு ஜெ. ராஜூவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை உதவி ஆணையர் திரு எஸ். சங்கரலிங்கம், தமிழ்நாட்டின் திருச்சி நகரைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு இ.இளங்கோவன் ஜென்னிங்ஸ், தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்த  காவல் துறை ஆய்வாளர் திரு எம். ரவீந்திரன், தமிழ்நாட்டின் பெருநகர சென்னையைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு ஏ. சிவ ஆனந்த், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த காவல் துறை, ஆய்வாளர்  திரு டி. திருமலை கொழுந்து, தமிழ்நாட்டின் திருப்பூரைச் சேர்ந்த சிறப்புப்பிரிவு காவல் துறை ஆய்வாளர், திரு. எஸ் முத்துமலை, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு எம். புகழ்மாறன், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் திரு டி. மாரியப்பன், தமிழ்நாட்டின் பெருநகர சென்னையைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு ஆர் கமலக்கண்ணன், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் திரு எஸ். தனபாலன், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த பெண் காவல் துறை துணை ஆய்வாளர் திருமதி எஸ் செண்பகவள்ளி ஆகியோருக்கு சிறந்த  சேவைக்கான காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: award policepolice award
ShareTweetSendShare
Previous Post

ஃபிபா ஒலிம்பிக்: ஆட்டமிழக்காமல் தொடரும் இந்தியா கூடைப்பந்து அணி.

Next Post

இந்திய தலைமை நீதிபதி பெயரில் போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களில் வைரலாவதால் பரபரப்பு!

Related News

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies