பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் தகுதி மு.க. ஸ்டாலினுக்கு இல்லை- அண்ணாமலை
Jul 3, 2025, 04:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் தகுதி மு.க. ஸ்டாலினுக்கு இல்லை- அண்ணாமலை

Web Desk by Web Desk
Aug 18, 2023, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மீனவச் சகோதரர்கள் மீது அக்கறை உள்ளது என்ற முதலமைச்சரின் நடிப்பு, அவரது மகன் அமைச்சர் உதயநிதி நடிப்பை மிஞ்சிவிட்டது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுகவின் குடும்ப ஆட்சி பயிற்சிப் பாசறையில், வழக்கம்போல, யாரோ எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டைப் பார்த்து, அதில் என்ன எழுதியிருக்கிறது என்றே தெரியாமல் கடகடவென்று ஒப்பித்துவிட்டுப் போயிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

1964 ஆம் ஆண்டு புயலில் சீர்குலைந்த தனுஷ்கோடி நகரைச் சீரமைக்க, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்தான் முதன்முதலாக முயற்சி எடுக்கிறார் என்பதைத் தெளிவாக ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர் திரு ஸ்டாலின். 1964க்குப் பிறகு பல முறை மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, மருமகனுக்கும், பேரனுக்கும், மகளுக்கும் மத்திய அமைச்சர் பதவியும், எம்பி பதவியும் வாங்கிக் கொடுப்பதில் மட்டுமே குறியாக இருந்ததால், தமிழக மக்களின் பிரச்சினை குறித்துப் பேசவோ செயல்படவோ நேரமில்லை என்பதை வெளிப்படையாகக் கூறியதற்கு நன்றி முதலமைச்சர் அவர்களே.

துண்டுச் சீட்டில் எழுதியிருப்பது என்னவென்று மேடைக்குப் பேச வந்தால், இப்படித்தான் தெரியாமல் பல ஒப்புதல் வாக்குமூலங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.

தமிழக மீனவ சகோதரர்கள் மீது அக்கறை உள்ளது போன்ற முதலமைச்சரின் நடிப்பு, அவரது மகன் அமைச்சர் உதயநிதி நடிப்பை விஞ்சிவிட்டது. 2004 2014 பத்து ஆண்டுகளில், காங்கிரஸ் கூட்டணியில் நாள்தோறும் பசையான துறைகளை வாங்கிக் கொண்டு, எம் மீனவ சகோதரர்கள் தாக்கப்பட்டபோதும், கொல்லப்பட்டபோதும், அன்றைய வருமானக் கணக்கில் மட்டுமே முழு கவனத்தையும் வைத்திருந்த உங்கள் நீலிக் கண்ணீரை எல்லாம் மக்கள் நம்பிய காலம் முடிந்து போய்விட்டது.

உங்கள் கட்சிக் கூட்டத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். பொதுமக்கள் மத்தியில் அதே துண்டுச் சீட்டு இனியும் எடுபடாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

புயலில் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு, பாரதப் பிரதமர் மோடி ஆட்சியில்தான் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சார வசதி வந்தது என்பதை மறந்து விடக் கூடாது. ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தியதும் பாரதப் பிரதமர் மோடி தான்.

1967 ஆம் ஆண்டிலிருந்து ஆறு முறை தமிழகத்தில் ஆட்சியிலிருந்தும், மத்திய அரசில் பல முறை அமைச்சர் பதவி வகித்தும், உங்களால் தனுஷ்கோடிக்கு அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து கொடுக்க முடியவில்லை என்பது உங்களுக்கே வெட்கமாக இல்லையா ஸ்டாலின் அவர்களே? மத்திய அரசில், தொழில் துறை, கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரவை எல்லாம் கேட்டுப் பெறத் தெரிந்த உங்களுக்கு, 1964ல், புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி ஞாபகம் வராதது அதிசயமே.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மீனவ சகோதரர்களுக்காக, தனி துறையை அமைத்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். கிஸான் திட்டம், காப்பீடு திட்டங்கள், தமிழக மீனவர் நலன் காக்க ரூ.2820 கோடிக்கும் அதிகமான நிதி, மீன்வளத் துறைக்கு செலவிடப்பட்டுள்ளது.

ஆனால் நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினீர்களா? மீனவ மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுப்போம், மீன்வளக் கல்லூரி அமைப்போம், குளிர்பதனக் கிடங்கு வசதி அமைப்போம், தடைக்கால நிவாரணம் 8000 ரூபாய் வழங்குவோம் என உங்கள் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினீர்களா?

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும், உங்கள் கூட்டணியைப் போன்ற மக்கள் விரோத சக்திகளைத் தாண்டி, முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ராமேஸ்வரமும் காசியைப் போல விரைவில், உலகப் புகழ்பெற்ற தலம் ஆகும் வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற அவர் திமுககாரர் அல்ல. அவரை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்.

மண்டபத்தில் யாரோ என்னவோ எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்து விட்டுச் செல்வது அந்தத் தகுதி அல்ல, நீங்கள் வகிக்கும் பதவிக்கு அது அழகும் அல்ல. அடுத்த முறையாவது, துண்டுச் சீட்டை அப்படியே ஒப்பிக்கும் முன்பாக, அதில் இருப்பது திமுகவுக்கு எதிரான ஒப்புதல் வாக்குமூலமா என்பதைச் சரிபார்க்கவும் என தெரிவித்துள்ளார்.

Tags: k annamalai newsk annamalai padayatra updatesk Annamalai Bjpk annamalai news todaybjp annamalaik annamalai latest interviewannamalaik annamalai latest speechk annamalaik annamalai exclusiveannamalai bjpk annamalai latest newsk annamalai speechk annamalai on neet billk annamalai india todayk annamali on padyatraannamalai newspadmaja joshi k annamalaibjp k annamalaik annamalai lok sabha 2024k annamalai interviewk annamalai ips
ShareTweetSendShare
Previous Post

லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கைது செய்தது என்ஐஏ.

Next Post

நீதிமன்றத்தில் இனி இ- பைலிங் மூலம் வழக்கு தாக்கல் – செப் 1ம் தேதி முதல் அமல்

Related News

ஓலா, ஊபர் – பீக் ஹவர்ஸில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி!

மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு : விவசாயிகளை தர தரவென்று இழுத்து சென்ற போலீசார்!

இமாச்சல பிரதேசம் : ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பழைய பேருந்து நிலைய வணிக வளாக கட்டிட ஏலம் ரத்து!

ராமநாதபுரம் : மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகள் கைது!

கும்பகோணம் அருகே பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கைது – கருப்பு முருகானந்தம் தலைமையில் ஆர்பாட்டம்!

ஆந்திரா : மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியருக்கு தர்ம அடி!

மத நம்பிக்கையில் தலையிட இயலாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை!

தொடரும் மழை – ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்வு!

அமெரிக்கா : ஹெலிகாப்டரில் இருந்து கொட்டப்பட்ட பணம்!

தக்காளி விலை 3 மடங்கு உயர்வு!

பார்சிலோனா நகரில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக வெப்பநிலை பதிவு!

தென்காசி : சாலையோர பாலத்தில் மோதி கார் விபத்து – ஒருவர் பலி!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies