ஜம்மு காஷ்மீர் உள்ள பதிண்டி பகுதியில் லஷ்கர் இ தொய்பாவின் அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் என சந்தேகித்த நபர்களைத் தேசியப் புலனாய்வு முகமை (NIA) சோதனை செய்தது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுடன் ஜம்மு காஷ்மீர் உள்ள பதிண்டியில் சிலர் தொடர்பில் இருப்பதாக என்ஐஏ இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அந்த நபர்களுக்குச் சொந்தமான வீடு, அலுவலகம் சோதனை செய்தது என்ஐஏ.
சோதனையில் அவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கள போராளிகள் (Over Ground Workers) என்பது தெரியவந்தது. சோதனைக்குப் பின் கையெறி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகிறது என்ஐஏ.