இமாச்சல் மழை, வெள்ளம்: ஜெ.பி.நட்டா நாளை ஆய்வு!
Mar 18, 2026, 09:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சல் மழை, வெள்ளம்: ஜெ.பி.நட்டா நாளை ஆய்வு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 19, 2023, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுகளை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நாளை பார்வையிடுகிறார்.

இதுகுறித்து பா.ஜ.க. தலைமை வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “இடைவிடாத பருவமழை, மேகவெடிப்பு போன்ற காரணங்களால் இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 உயிரிழந்தனர். நிலச்சரிவு, மழை, வெள்ளத்துக்கு இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பேரழிவை பார்வையிடுவதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, நாளை இமாச்சலப் பிரதேசத்துக்குச் செல்கிறார். காலையில் சிர்மௌர் மாவட்டத்திலுள்ள பௌண்டா சாஹிப் செல்லும் நட்டா, பின்னர் சிர்மௌரி தால், கச்சி தாங் ஆகிய கிராமங்களுக்குச் செல்கிறார். அங்கு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்யும் நட்டா, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

பின்னர், நிலச்சரிவு மற்றும் கோவில் இடிந்து விழுந்த சிம்லாவின் சம்மர் ஹில் பகுதிக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து, சிம்லா மற்றும் பிலாஸ்பூர் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து நிவாரணம், மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து விவாதித்து ஆலோசனை நடத்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: jp naddabjp nadda
ShareTweetSendShare
Previous Post

இமாச்சலப் பிரதேச பேரழிவு: பிரதமர் மோடி ஆலோசனை!

Next Post

ஒடிசாவில் போதைப்பொருள்- 2 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் 

Related News

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies