ஒடிசாவில் போதைப்பொருள் வழக்கில் 2 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
அமலாக்க இயக்குனரகம் 3 கிலோவுக்கும் அதிகமான பிரவுன் சுகர் வகை போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்த இருவர் மீது புவனேஸ்வர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. பணமோசடி வழக்கில் எஸ்கே ஆஷிக் மற்றும் அவரது சகோதரர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திக்கை தாக்கல் செய்துள்ளது. ஜூலை 28 அன்று குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்கவும், பணமோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அரசு தரப்பு புகார் தாக்கல் செய்தது. புவனேஸ்வர் சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் செய்த பணமோசடி குற்றத்தை ஆகஸ்ட் 18 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப் படை, குற்றப் பிரிவு விசாரணையை தொடங்கியது. ஆஷிக் அலி மற்றும் மொகதாப் அலியிடம் இருந்து 3 கிலோ 265 கிராம் போதைப்பொருட்கள் வைத்திருந்தது மற்றும் அவர்களின் தனிப்பட்ட சோதனையின் போது அதை மீட்டது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை விசாரணையில், மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள மதீனாபூர் பகுதியில் பேதைப் பொருள் விற்பனை செய்பவர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி வந்தது தெரியவந்தது.