மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்ட காவல்துறையின் விரைவான நடவடிக்கையால் போதைப்பொருள் கடத்தல்காரர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கும்பலின் மற்றொரு முயற்சியை மேகாலயா காவல்துறை முறியடித்துள்ளதாக முதல்வர் கான்ராட் சங்மா பாராட்டியுள்ளார்.
ஒரு நாள் முன்னதாக, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான இரண்டு வெவ்வேறு வழக்குகளில் ஒரு ஆப்பிரிக்க நாட்டவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள கடத்தல் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரூபாய் 2 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.