வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்து வரும் திமுக கூட்டணியை, வரும் பாராளுமன்றத் தேர்தலில் முழுவதுமாகப் புறக்கணிப்போம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய மாலை என் மண் என் மக்கள் பயணம், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது பேரன்பு கொண்ட பொதுமக்கள் சூழ இனிதே நிறைவுற்றது.
இங்கிருக்கும் சொரிமுத்து அய்யனார் கோவிலும், பூவன் பறையர் குறித்த கல்வெட்டும், தமிழகம் பிறப்பால் ஜாதி மத ஏற்றத் தாழ்வில்லாத பூமியாக விளங்கியது என்பதையும், பிறப்பால் பிரிவினை என்பது நம்மை ஆளவந்த அன்னியர்களால் உருவானது என்பதையும் எடுத்துக் கூறுகிறது.
அம்பாசமுத்திரம் வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகளுக்கு, 2021 ஆம் ஆண்டு, புவிசார் குறியீடு வழங்கியது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அரசு.
மோடியின் முகவரி: அம்பாசமுத்திரம்
ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்பு பெற்ற திருமதி டெய்சிராணி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பலனடைந்த வாழை நார் நிறுவனம் நடத்தும் சுமத்ரா தேவி, முத்ரா கடனுதவி மூலம் தொழில் முனைவோரான பழனியம்மாள், சுவநிதி திட்டத்தின் மூலம் பலனடைந்த தையல் கடை நடத்தும் சந்தனகுமாரி, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் வீடு பெற்ற திருமதி சிவகாமி. இவர்கள்தான் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.
கூலி உயர்வு கேட்டு அமைதியான முறையில் பேரணி நடத்திய மாஞ்சோலை தேயிலைத் தொழிலாளர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தி ஒன்றரை வயது குழந்தை உட்பட 17 பேர் கொல்லப்பட்ட போது, ஆட்சியில் இருந்தது மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. கருணாநிதியின் கீழ்த்தரமான அரசியலை, இன்றைய சபாநாயகர் அப்பாவுவே… pic.twitter.com/WnRx5rPfcB
— K.Annamalai (@annamalai_k) August 19, 2023
கூலி உயர்வு கேட்டு அமைதியான முறையில் பேரணி நடத்திய மாஞ்சோலை தேயிலைத் தொழிலாளர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தி ஒன்றரை வயது குழந்தை உட்பட 17 பேர் கொல்லப்பட்ட போது, ஆட்சியில் இருந்தது மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. கருணாநிதியின் கீழ்த்தரமான அரசியலை, இன்றைய சபாநாயகர் அப்பாவுவே விமர்சித்திருக்கிறார். சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி அரசியல் செய்யும் புற்றுநோய் தான் திமுக.
திருநெல்வேலியில் சித்தா பல்கலைக்கழகம் அமைப்போம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, தற்போது அதை சென்னைக்கு மாற்றியிருக்கிறார்கள். நீதிமன்றம், “ஏன் மாற்றுகிறீர்கள்” என்று கேட்ட பிறகுதான் உண்மை வெளிவருகிறது. கச்சத்தீவையும் தாரைவார்த்து, தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், டாஸ்மாக் கடைகளையும் திறந்து வைத்து பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது இந்த ஊழல் திமுக அரசு. இதில் தமக்குத் தாமே சூட்டிக் கொண்ட தமிழினத் தலைவர் என்ற பட்டம் வேறு.
தொடர்ந்து, வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்து வரும் திமுக கூட்டணியை, வரும் பாராளுமன்றத் தேர்தலில் முழுவதுமாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியை மூன்றாவது முறையாக மீண்டும் தொடரச் செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.