சந்திரயான்- 3 வெற்றி :- குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து!
Jan 14, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான்- 3 வெற்றி :- குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Aug 24, 2023, 05:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவில் தரையிறங்கிய சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியதற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவின் தரையில்  கால் பதித்தது. சுமார் 4 மணி நேரம் கழித்து, லேண்டரிலிருந்து ரோவர் நிலவில் இறங்கி ஆய்வு பணியைத்  தொடங்கி உள்ளது. ரோவர் மற்றும் லேண்டர் அங்கிருந்து 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்தியா தான் நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடாகும்.

குடியரசுத் தலைவர் வாழ்த்து:

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரடி ஒளிபரப்பாக கண்ட, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இஸ்ரோ மற்றும் சந்திரயான் -3 திட்டத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தனது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தார்.

I once again congratulate the ISRO team and all fellow citizens for successful deployment of Pragyan-rover from inside Vikram-lander. Its rolling out a few hours after the landing of Vikram marked the success of yet another stage of Chandrayan 3. I look forward with excitement,…

— President of India (@rashtrapatibhvn) August 24, 2023

குடியரசுத் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில், வரலாறு படைத்த நாள் இன்று.
சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதன் மூலம், நமது விஞ்ஞானிகள் வரலாறு படைத்தது மட்டுமல்லாமல், புவியியலின் கருத்தையும் மாற்றியமைத்துள்ளனர்! இது உண்மையிலேயே ஒரு முக்கியமான சந்தர்ப்பம், வாழ்நாளில் ஒரு முறை நடக்கும் நிகழ்வு, அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்துகிறது. இஸ்ரோ மற்றும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன், மேலும் அவர்கள் பற்பல சாதனைகளைச் செய்ய வாழ்த்துகிறேன்.

சந்திரயானின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் ஒரு பெரிய சாதனை என்று நான் நம்புகிறேன். நவீன அறிவியலுடன் இந்தியா தனது வளமான பாரம்பரிய அறிவுத் தளத்தை மனிதகுலத்தின் சேவையில் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை இது காட்டுகிறது “.

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறக்கியதற்காக இஸ்ரோவிற்கும், இந்தியர்களுக்கும் குடியரசு துணைத் தலைவர்  ஜெகதீப் தன்கர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தை நிகழ்த்திய நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவத்தில் இந்த முயற்சியை அடைந்த முதல் நாடாகவும் இந்தியா மாறியுள்ளது. இந்த சாதனை எதிர்கால தரையிறங்கும் திட்டங்கள் மற்றும் கோள் ஆராய்ச்சியில் பிற தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு முன்னோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“இந்தியாவுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிகுந்த தருணம், விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் எழுச்சி” என்று விவரித்துள்ளார். மேலும் இது நமது அறிவியல் திறன் மற்றும் அசைக்க முடியாத உறுதிக்கு ஒரு சான்று என்று கூறியுள்ளார். விண்வெளித் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் நமது நாட்டின் அர்ப்பணிப்பு உலகளாவிய தலைவராக மாற வழிவகுத்துள்ளது.
கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில், சந்திரயான் -3 இல் அனைத்தயும் இஸ்ரோ திட்டமிட்டதால், இது தென் துருவத்தில் சரியான தரையிறக்கத்திற்கு வழிவகுத்தது.

சந்திரனில் விக்ரமின் தரையிறக்கம் “21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது” என்பதை நிரூபித்துள்ளது என்று கூறியுள்ளார்.

PM @narendramodi just had a conversation with ISRO Chief S. Somanath to extend his hearty congratulations on the remarkable achievement of Chandrayaan3's successful landing on the Moon.#Chandrayaan3 #Chandrayaan3Landing @PMOIndia @narendramodi @isro @Murugan_MoS @PIB_India pic.twitter.com/bDVZrddh0E

— PIB in Tamil Nadu (@pibchennai) August 23, 2023

தொலைபேசியில் மோடி வாழ்த்து

சந்திரயான் – 3 வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு குறித்து ஜோஹன்ஸ்பர்க்கிலிருந்து தொலைபேசி வாயிலாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியா சரித்திரம் படைத்து இருப்பதாகவும்; புதிய இந்தியா உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: PM ModiChaandrayaan 3President Droupadi Murmuchandrayaan 3 launchpm modi latest speech
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான்-3 வெற்றி: உலகத் தலைவர்கள் வாழ்த்து!..

Next Post

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த சந்திரயான் – சாதித்த மூன்று தமிழர்கள் – முழு விவரம்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies