விண்வெளித் துறையில் புதிய சாதனைப் படைத்த சந்திரயான்-3, நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தது.
சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலின் தகப்பனார் பழனிவேல், “என் மகன் இந்திய நாட்டை உலகில் பெருமையடைய செய்ததில் மிக்க மகிழ்ச்சி, நமது தேசம் முழுக்க பொதுமக்கள் செய்த பிரார்த்தனைகளே சந்திரயான்-3 வெற்றிப்பெற காரணமாக அமைந்தது” என்றார்.
அவரை, ஆர்.எஸ்.எஸ் புதுச்சேரி கோட்ட துணைத் தலைவர் டாக்டர் மணிவண்ணன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராஜ் நந்தகுமார், ஆர் எஸ் எஸ் மாநில இணைச்செயலாளர் (மக்கள் தொடர்பு) இராம இராஜசேகர், விபாக் பிரச்சாரக் (கோட்ட அமைப்பாளர்)மஞ்சுநாத் இராமமூர்த்தி, தியாகராஜன் உள்ளிட்டோர் சந்தித்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
அவருக்கு ஆர் எஸ் எஸ் தலைவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு, ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவர் மோகன் ஜீ பகவத் அவர்களின் “நாளைய பாரதம் “புத்தகத்தையும் வழங்கினார்கள்.