நீலகிரியில் குந்தா பாலம், கோவையில் காடம்பாறை, கன்னியாகுமரியில் கோதையாறு ஆகிய அணைகளில், அணுகு சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகத் தமிழக மின்வாரியம் சார்பில் உலக வங்கியிடம் இருந்து ரூ. 50 கோடி கடன் கோரப்பட்டிருந்தது. தற்பொழுது, உலக வங்கி இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட அணைகள் தமிழக மின்வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இவற்றில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தி நீர் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணைகள் கட்டப்பட்டுப் பல ஆண்டுகள் ஆவதால், அணைகளின் பல பகுதிகள் சரியான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது.
அந்தவகையில், 27 அணைகளின் கரைகளைச் சீரமைப்பதற்காகத் தமிழக மின்வாரியம் சார்பில் உலக வங்கியிடமிருந்து ரூ. 227 கோடி கடன் வாங்கப்பட்டது. இதையடுத்து, தண்ணீர் கசிவு உள்ள பகுதிகள், அணைகளின் கரை பகுதிகள் உள்ளிட்டவற்றைச் சீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. தற்பொழுது, மேலும் 50 கோடி ரூபாய் நீதி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.