அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தற்போது “சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜி-20 உட்சி மாநாட்டில் கலந்து கொள்வார் என நம்பினேன்” என்று தெரிவித்தார்.
2023ம் ஆண்டு ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி, நாட்டின் பல்வேறு இடங்களில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரிதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர்.
இந்நிலையில், மாநாட்டில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று ரஷியா அதிபர் புதின் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். தற்போது சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணிக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார் என நம்பினேன்” என்று தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் மூலம் இருநாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்களை சரிசெய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்ததாக கூறப்படுகிறது.